Search This Blog

Sunday, 29 July 2018

என்னை அழைத்தவரே


என்னை அழைத்தவரே
 என்னைத் தொட்டவரே
 நீர் இல்லாமல் நான் இல்லையே

 நான் வாழ்ந்தது உங்க கிருப
 நான் வளர்ந்ததும் உங்க கிருப
 என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

 உங்க கிருபை வேண்டுமே
 உங்க கிருபை போதுமே
 உங்க கிருபை இல்லாமல்
 நான் ஒன்றும் இல்லையே - இயேசுவே

 தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
 தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல
 கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
 உங்க கிருப இல்லேனா நானும் இல்ல

 நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
 திறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்ல
 தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருப
 உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல




கர்த்தர் எனக்காய் யாவையும்

கர்த்தர் எனக்காய் யாவையும்
 செய்து முடிப்பார்

 சொன்னதை செய்யும் வரை நீர்
 என்னைக் கைவிடுவதில்லை

 கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
 யாவையும் செய்து முடிப்பார்
 கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
 மலைகளை பெயர்ப்பாரே

1. நீர் சொன்னது நடக்குமோ
 என்ற சந்தேகம் இல்லை
 நீர் நினைத்தது நிலை நிற்குமோ
 என்ற பயமும் இல்லை –-- சொன்னதை

2. என் நிந்தனை நிரந்தரம்
 இல்லை என்றீரே
 நான் இழந்ததைத் திரும்பவும்
 தருவேன் என்றீரே –-- சொன்னதை

ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்


ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்
 ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்
 அல்லேலூயா (3) என்று பாடிடுவேன்

1. ஆண்டவர் செய்த அற்புதங்கள்
 அற்புதம் அற்புதம் அற்புதமே
 குருடர் கண்களைத திறந்தாரே
 செவிடர் கேட்கச் செய்தாரே
 என்னையும் இரட்சித்தாரே
 என் வாழ்வில் அற்புதமே

2. பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
 தூக்கி எடுத்து கழுவினாரே
 கரத்தை பிடித்துக் கொண்டாரே
 கரத்தால் தாங்குவேன் என்றாரே
 புது சிருஷ்டியாய் மாற்றினாரே
 என் வாழ்வில் அற்புதமே

3. வானாதி வானங்கள் கொள்ளாத
 வல்லவர் வாழ்வினில் வந்தாரே
 வாசற்படியில் தட்டினாரே
 இதயத்தில் வாசம் செய்திடவே
 என்னுடன் ஜீவிக்கின்றார்
 என் வாழ்வில் அற்புதமே




கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே


கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
 உம்மை துதித்து பாடுகிறோம்
 கிருபை பெருகுதப்பா  - உங்க மகிமை இறங்குதப்பா
 ஆராதனை ஆராதனை (2)

 1. இரண்டு மூன்று  பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
 நான் இருப்பேன் என்றீரே - என் துதியில்  வாழ்பவரே
 ஆராதனை ஆராதனை (2)

 2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை  பெருகுதப்பா
 உங்க கிருபை பெருகும்போது  - உங்க மகிமை விளங்குதப்பா
 ஆராதனை ஆராதனை (2)

 3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
 நீர் இறங்கி வந்திடுவீர் - எம்மை ஆசீர்வதித்திடுவீர் 
ஆராதனை ஆராதனை (2)




உயருமும் உன்னதமும் ஆன


1. உயருமும் உன்னதமும் ஆன
 சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
 சேனைகளின் கர்த்தர் ஆகிய
 ராஜாவை என் கண்கள் காணட்டும்

 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2)

 2. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்
 சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
 அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
 இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்

3. ஆதியும் அந்தமுமானவர் இவர்
 அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர்
 இருந்தவரும் இருப்பவரும்
 சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

4. எல்லா நாமத்திலும் மேலானவர்
 முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
 துதிகன மகிமைக்கு பாத்திரரே
 தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன்




என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே


என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
 என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே

 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 ஆவியினாலே நிரப்பிடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 வல்லமையாலே நிரப்பிடுங்க

 நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும்
 கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும்
 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
 பவுலை போல் பயன் படுத்திடுங்க - நிரப்பிடுங்க

 காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
 முடிவுக்கு வரணும் - நான்
 மூழ்கணுமே நான் மூழ்கணுமே
 ஆவியின் நதியிலே மூழ்கணுமே

 நிரம்பணுமே நான் நிரம்பணுமே
 பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

 தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
 என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் - என்
 செய்திடுங்க ஐயா செய்திடுங்க
 நதியாய் பாய்ந்திட செய்திடுங்க - நிரப்பிடுங்க

 என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
 என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே

 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 ஆவியினாலே நிரப்பிடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 வல்லமையாலே நிரப்பிடுங்க




கண்ணீரால் நன்றி சொல்கிறேன்


கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
 தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே

 நன்றி நன்றி ஐயா இயேசையா
 பல கோடி நன்மை செய்தீரே
 நன்றி நன்றி ஐயா இயேசையா
 பல கோடி நன்மை செய்தீரே

1. தாழ்வில் என்னை நினைத்தீரே
 தயவாய் என்னை உயர்த்தினீரே
 உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
 உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி

2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
 உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
 உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
 கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
 கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி

3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
 சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
 உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
 பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி




என்னை நடத்திடும் தேவன்


என்னை நடத்திடும் தேவன்
 என்னோடு இருக்க
 பயமே எனக்கில்லையே
 நான் நம்பிடும் தேவன்
 என் துருகமாய் இருப்பதால்
 கலக்கமே எனக்கில்லையே

 பயமில்லை (2) பயமில்லையே
 நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
 பயமில்லை (2) பயமில்லையே
 நமக்காக யுத்தம் செய்வார் பயமில்லையே

 சிறு கூட்டமே நீ பயப்படாதே
 கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
 எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
 ஆவியானவர் கொடியேற்றுவார் - பயமில்லை

 பாதைகள் எங்கும் தடைகற்களோ
 தாமதம் மட்டும் பதிலானதோ
 நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
 நிச்சயம் நடத்துவார் பயமில்லையே - பயமில்லை

 முந்தினதை நீ யோசிக்காதே
 பூர்வமானதை சிந்திக்காதே
 மேலானதை நீ சுதந்தரிக்க
 வேரூன்ற செய்வார் பயமில்லையே - பயமில்லை

 அல்லேலூயா - (6)
ஒசன்னா - (6)




ஆயிரமாயிரம் நன்மைகள்

ஆயிரமாயிரம் நன்மைகள்
அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே

1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் - என்னை
விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே

2. மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே

புது வாழ்வு தந்தவரே


புது வாழ்வு தந்தவரே
 புது துவக்கம் தந்தவரே (2)

நன்றி உமக்கு நன்றி
 முழு மனதுடன் சொல்கின்றோம்
 நன்றி உமக்கு நன்றி
 மன நிறைவுடன் சொல்கின்றோம் (2)

பிள்ளைகளை மறவாமல்
 ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
 மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு – நன்றி…

முந்தினதை யோசிக்காமல்
 பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்றச் செய்தீர்
 சாம்பலை சிங்காரமாக்கி விட்டீர் (2)
அதற்கு – நன்றி…

கண்ணீருடன் விதைத்ததெல்லாம்
 கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
 ஏந்தி நின்ற என் கரங்கள் எல்லாம்
 கொடுக்கும் கரங்களாய் மாற்றி விட்டீர் (2)
அதற்கு – நன்றி…




ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு


1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
 விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
 நம்பிதா அழைக்கும்பொழுது
 நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

 இன்பராய் ஈற்றிலே
 மோட்சகரையில் நாம் சந்திப்போம்
 இன்பராய் ஈற்றிலே
 மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2. அந்தவான் கரையில் நாம் நின்று
 விண்ணோர் கீதங்களை பாடுவோம்
 துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
 சுத்தரில் ஆறுதல் அடைவோம் - இன்பராய்

3. நம்பிதாவின் அன்பை நினைத்து
 அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
 மீட்பின் நன்மைகளை உணர்ந்து
 அவரை வணங்கித் துதிப்போம் - இன்பராய்

4. அந்த மோட்சகரையடைந்து
 வானசேனையுடன் களிப்போம்
 நம் தொல்லை யாத்திரை முடித்து
 விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - இன்பராய்

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
 சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
 துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
 சேமமாய் நாம் இளைப்பாறுவோம் - இன்பராய்

6. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
 ஆளுகை செய்து வீற்றிருப்பார்
 துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
 தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - இன்பராய்

7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
 கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
 பக்தர் அங்கே முடி சூட்டுவார்
 ஓர் முடி அங்குண்டு எனக்கும் - இன்பராய்

8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
 ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
 அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
 ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் - இன்பராய்

9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
 என்று நல் மீட்பர் அழைக்கிறார்
 மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
 எல்லோரும் வாருங்கள் என்கிறார் - இன்பராய்




மோட்ச யாத்திரை செல்கின்றோம்


1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் - இம்
 மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
 கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே
 காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்


பல்லவி

ஆனந்தமே ஆ ஆனந்தமே
 ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
 ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
 ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்



2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே - தம்
 நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
 தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
 நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே --- ஆனந்தமே

3. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
 அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
 கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
 கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் --- ஆனந்தமே

4. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே - இக்
 கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
 கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
 கைவிடாமல் நித்தமும் நடத்துவார் --- ஆனந்தமே




நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
 இயேசு வருகிறார்
 நொறுங்குண்ட நெஞ்சத்தையே
 இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம்
 உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
 செய்த பாவம் இனி போதும்
 அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே

2. குருதி சிந்தும் நெஞ்சம்
 உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
 செய்த பாவம் இனி போதும்
 அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே

நம் தேவனைத் துதித்துப்பாடி


நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

 களிகூர்ந்திடுவோம் , அகமகிழ்ந்திடுவோம்
 துதி சாற்றிடுவோம் , புகழ் பாடிடுவோம்
 அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
 அவர் நாமம் போற்றுவோம்
 துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
 அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
 அவர் நாமம் போற்றுவோம்
 நல் ஆவியின் கனிகள் ஈந்து
 அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

3. மேலோக தூதர் கீதம் பாடி
 அவர் நாமம் போற்றுவோம்
 பேரின்ப நாடு தன்னில் வாழ
 அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்




வான் புகழ் வல்ல

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
 வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
 காத்திடும் கரகதின் வல்லமையை என்றும்
 கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
 யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
 யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
 நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே --- வான்

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
 இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
 அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
 கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே --- வான்

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
 சுற்றி உலாவின நித்திய தேவன்
 மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
 முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே --- வான்

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
 சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
 சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
 சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே --- வான்

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
 தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
 வழுவ விடாமலே காத்திடும் தேவன்
 மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே --- வான்

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
 மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
 மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
 மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் --- வான்




பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பல்லவி

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
 பாரினில் பலியாக மாண்டாரே

அனுபல்லவி

பரிசுத்தரே பாவமானாரே
 பாரமான சிலுவை சுமந்தவரே

சரணங்கள்

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
 காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
 கொலை செய்யவே கொண்டு போனாரே
 கொல் கொதா மலைக்கு இயேசுவை

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
 குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
 பரிகாசமும் பசி தாகமும்
 படுகாயமும் அடைந்தாரே

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
 கிரீடம் முள்களில் பின்னி சூடிட
 இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
 இதைக் காணும் உள்ளம் தாங்குமோ

4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
 உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
 தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
 தளராமல் நம்பி ஓடி வா

5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
 பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
 கண்டு நீ மனம் கலங்குவதேன்
 கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா

6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
 வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
 இளைப்பாறுதல் தரும் இயேசுவை
 இன்று தேடி நாடி நம்பி வா