குருசினில் அந்தோபார்
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே
சரணங்கள்
1. திண்டு போல எண்டிசையின்
தொண்டர் பாவம் ஆண்டான் மேலே
நின்றதே ஓர் பண்டு ஏவை
தின்ற சாபம் மண்டுதே --- உருகாயோ
2. தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்! --- உருகாயோ
3. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்!
புல்லரிதோ நன்றி கெட்டு
புறம்பாக்கினாரன்றோ! --- உருகாயோ
4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனார்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குரு சேறினார்! --- உருகாயோ
5. மூவுலகும் தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்! --- உருகாயோ
6. நித்திய காலம் பாத்திரராய்
நீசர் வாசஸ்தலம் உய்ய
சத்திய தாசர் சித்தமேவும்
சங்கை ராஜன் இங்கு பார்! --- உருகாயோ
No comments:
Post a Comment