சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா
1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா --- சிலுவை
2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்துமம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே --- சிலுவை
3. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார் --- சிலுவை
4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் --- சிலுவை
5. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உமக்களிப்பார் --- சிலுவை
|
No comments:
Post a Comment