Search This Blog

Sunday, 27 January 2008

எங்கே சுமந்து போகிறீர்

பல்லவி
எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?

சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது
அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா --- எங்கே

2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,
தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்--- எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர --- எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர ,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர --- எங்கே

5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் ,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்--- எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து --- எங்கே

No comments:

Post a Comment