Search This Blog

Monday, 18 February 2008

காலத்தின் அருமையை

பல்லவி
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே

அனுபல்லவி
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

சரணங்கள்
1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? --- காலத்தின்

2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே --- காலத்தின்

3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ,
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? --- காலத்தின்

4. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? --- காலத்தின்

No comments:

Post a Comment