Search This Blog

Monday, 5 February 2007

அடைக்கலமே உமதடிமை நானே

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
கர்த்தரே உம் செய்கைகள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்பப் பாக்கியமிதே

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்து கொள்ளுமே

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே

5. பாவங்களைப் பாராதென்னை பற்றிக் கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே

No comments:

Post a Comment