உன்றன் சுயமதியே நெறி என்-று
உகந்து சாயாதே; - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே.
1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய்; - தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்; அருள் சூழாய். - உன்றன்
2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு; - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு; கதி தேடு. - உன்றன்
3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே; - தீயர்
கெட்ட வழியில் நில்லாதே; அது தீதே. - உன்றன்
4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே; - அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே; அதொண்ணாதே. - உன்றன்
5. நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம்; - அதின்
மேல் நிற்குமே தேவ கோபம்; மனஸ்தாபம். - உன்றன்
No comments:
Post a Comment