Search This Blog

Sunday, 10 June 2007

இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்

இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் ரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்து பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

1. அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாக்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

2. மெய்ச் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்



பாடல் பிறந்த கதை:

தேவன் வசனங்களால் மாத்திரம் அன்றி, வசனங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல்கள் மூலமாகவும் தினம் தினம் நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறார்.ஆனால் அந்த பாடல்களை எழுதியவர்களை ஆண்டவர் தெரிந்து கொண்ட விதமும், பாடல்கள் எழுதப்படுவதற்கு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த விதமும் அற்புதமானது

ஒரு நாள் திருமதி நேப் என்பவர் தான் இயற்றிய இராகத்தை, தன் நண்பரிடம் வாசித்து "இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்" என்று கேட்கின்றார். உடனே அந்த பெண் நண்பர் “Blessed assurance, Jesus is mine!” என்று பதில் அளிக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் முழுப் பாடலையும் எழுதி முடிகின்றார் அந்த பெண் நண்பர்.

அவர் வேறுயாருமல்ல. ஃபேன்னி கிராஸ்பி (Fanny Crosby) என்ற கண்பார்வையற்ற தேவமகள் தான் அவர் . 1820 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி , அன்பான பெற்றோர்களுக்கு மகளாக பிறந்தவர்.

பவுல் அடிகளார் "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது" ( 2 கொரி : 12:7) என்று கூறி தனக்கிருந்த அந்த "முள்"ளைப்பற்றிக் கவலைப்படாமல் தேவன் அவருக்கு வைத்த இலக்கை நோக்கி ஓடியது போல, இந்த தேவமகளும், தன்னுடைய குறைப்பாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் தேவனை மகிமைப் படுத்துவதிலேயே குறியாக இருந்தவர்.

இவர் தனக்கு தேவனால் அனுமதிக்கப்பட்ட அந்த "முள்"ளைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்..

"வாழ்நாள் முழுவதும் கண்பார்வை அற்ற நிலை என்பது, தேவனால் அனுமதிக்கப்பட்ட ஆசீர்வாத செயலாகும். நாளையே இந்த உலக பார்வை எனக்கு கொடுக்கப் படுமானால் நான் மறுத்து விடுவேன். அப்படி செய்யாவிட்டால், இந்த உலக அழகினால் ஈர்க்கப்பட்டு ஆண்டவருக்கு மகிமைப் படுத்துகின்ற பாடல்களை பாடாமல் போய்விட முடியும்"

எத்தனை அருமையான சாட்சி!!!. நாமும் நம்முடைய தாலந்துகளை ஆண்டவருக்கு ஒப்புகொடுப்போமா?. கர்த்தர் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென்.


IN ENGLISH:

1. Blessed assurance, Jesus is mine!
Oh, what a foretaste of glory divine!
Heir of salvation, purchase of God.
Born of His Spirit, washed in His blood.

This is my story, this is my song,
Praising my Savior all the day long

2. Perfect submission, perfect delight,
Visions of rapture now burst on my sight;
Angles descending, bring from above
Echoes of mercy, whispers of love.

3. Perfect submission, all is at rest,
I in my Savior am happy and blest;
Watching and waiting, looking above,
Filled with His goodness, lost in His love.

No comments:

Post a Comment