Search This Blog

Sunday, 17 June 2007

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

அன்பர் அன்பை யாரால் கூறலாம் - ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என் நேசர்!

அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!
அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்! - அன்பர்

1. எல்லா ஜலமும் மையானாலுமே - அன்பை எழுதிட
எல்லா மரமும் பேனாவானாலுமே
ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்
அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு - அன்பர்

2. மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் - ஆழ்ந்து தூதரும்
பார்ப்பதில் பணிந்து குணிகிறார்
பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது
என்ன அன்பு என்ன நேசம் மன்னரேசின் மகத்துவநேசம்! - அன்பர்

3. ஏழை என்னில் பா்ந்த அன்புதான் - ஆ! ஏராளம்
ஏழை என்னால் பகரக் கூடுமோ
அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! - அன்பர்

No comments:

Post a Comment