இயேசுவின் நாமமே திருநாமம், - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.
1. காசினியில் அதனுக் கிணையில்லையே; - விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. - இயேசுவின்
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம்; - அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம். - இயேசுவின்
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம்; - இது
சத்திய விதேய மனமொத்தநாமம். - இயேசுவின்
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம்; - நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். - இயேசுவின்
5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி; - பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி. - இயேசுவின்
No comments:
Post a Comment