எல்லாம் யேசுவே - எனக்கெல்லா மேசுவே
தொல்லைமிகு மிவ்வுலகில் - துணை இயேசுவே - எல்லாம்
1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் - எல்லாம்
2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் - எல்லாம்
3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் - எல்லாம்
4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் - எல்லாம்
5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்- எல்லாம்
6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் - எல்லாம்
No comments:
Post a Comment