எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் [2]
1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே [2] -(எந்த காலத்)
2. துன்பநேரத்தில் இன்பமே அவர்
இன்னல் வேளையில் என் மாறிடாநேசர் [2] -(எந்த காலத்)
3. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே [2] -(எந்த காலத்)
4. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே [2] -(எந்த காலத்)
5. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே [2] -(எந்த காலத்)
6. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே [2] -(எந்த காலத்)
7. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே [2] -(எந்த காலத்)
8. ஞானமும் நீரே - தானமும் நீரே
நியாமமும் நேரே - என் நாதனும் நீரே [2] -(எந்த காலத்)
9. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே [2] -(எந்த காலத்)
10. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே [2] -(எந்த காலத்)
No comments:
Post a Comment