Search This Blog

Sunday, 27 April 2014

எந்தன் கன்மலை ஆனவரே


எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே (4)

எந்தன் சிறகுகளின் நிழலில்
என் நெஞ்சம் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே
ஆராதனை உமக்கே (4)

என் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே
ஆராதனை உமக்கே (4)

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே
ஆராதனை உமக்கே (4)

No comments:

Post a Comment