Search This Blog

Wednesday, 14 May 2014

நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே தினம் நடத்துமேன்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே

2. தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே

3. இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே

No comments:

Post a Comment