Search This Blog

Thursday, 15 May 2014

மகிமை மாட்சிமை நிறைந்தவரே


பல்லவி

மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்
சரணங்கள்

1. உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரினில் மடங்கிடுதே
உயர்ந்தவரே, சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம் --- மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளி நிறைவே அருள் நிறைவே
என்றும் தொழுதிடுவோம் --- மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம்
இன்றும் தொழுதிடுவோம் --- மகிமை

4. நித்திய தேவனும் நீரே
நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம் --- மகிமை

No comments:

Post a Comment