Search This Blog

Saturday, 17 May 2014

நீயே நிரந்தரம்

பல்லவி

நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் ஆ...ஆ... --- அம்மையப்பன்
சரணங்கள்

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன்

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன்

No comments:

Post a Comment