Search This Blog

Monday, 12 May 2014

விதைப்பும் அறுப்புமே


1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ?

No comments:

Post a Comment