Search This Blog

Thursday, 4 June 2015

ஆதி்பிதாக் குமாரன் ஆவி திரியேகர்க்கு

எழுதியவர்   : காபிரியேல் உபதேசியார்
பூரிகல்யாணி
தாளம் : ஆதிதாளம்


  • பல்லவி
  • ஆதி்பிதாக் குமாரன் - ஆவி திரியேகர்க்கு
  • அனவரதமும் தோத்திரம் - திரியேகர்க்கு
  • அனவரதமும் தோத்திரம் 

  • அனுபல்லவி
  • நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
  • நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
  • நிறைந்த சத்திய ஞான மனோகர, 
  • உறைந்த நித்திய வேத குணாசர
  • நீடு வாரி திரை சூழு மேதினியை 
  • மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் --- ஆதி


  • சரணங்கள்
  • 1. எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள் 
  • என்றென்றைக்கும் பணிபாதர், 
  • துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
  • சோதனை செய் அதி நீதர் 
  • பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான், 
  • பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும் 
  • பண்பதாய்க யம்பு விவேகன், 
  • அன்பிரக்கத யாளப்பிரவாகன் 
  • பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி 
  • பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் --- ஆதி

  • 2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம் 
  • நீணிலத்தில்லாமல் அழிந்து,
  • தீதறு நரகில் தள்ளுண்டு - மடிவோ மென்று
  • தேவ திருவுளம் உணர்ந்து,
  • பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
  • பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
  • பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம் 
  • இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் 
  • பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற் 
  • சூரியன் முன் இருள் போலவே சிதறும் --- ஆதி

No comments:

Post a Comment