Search This Blog

Saturday, 29 August 2015

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு
அகன்று போகமாட்டேன்

1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்

2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்

3. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்

4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு

5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்

அடிமை நான் ஆண்டவரே

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர

தேடிவந்த தெய்வம் இயேசு

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்

2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும

உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே

2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே

3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான்

4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கள் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே – நான்

5. வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான

என் பாவங்கள் என் இயேசு

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்

2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி

3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்.

இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய

யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார

சிங்கக்குட்டிகள் பட்டினி

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு
குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு
குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

1. என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என் தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா

2. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா

3. ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்

4. பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர

நன்றி நன்றி நன்றி என்று

நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்

1. வல்லவரே நல்லவரே

2. காண்பவரே காப்பவரே

3. பாவங்களைப் போக்கிவிட்டீர்

4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு – 3

1. என்னென் துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்னை சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசான்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்துவிட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப் போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார

என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

1. பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்

2. அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்

3. ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்

4. கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே

5. நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்

6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே

7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும

எந்தன் இயேசு கைவிடமாட்டார்

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலூயா – 8

1. நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்

2. கடந்ததை மறக்கின்றேன்
கண்முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன்

3. சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்

4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

1. அப்பா உம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

2. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும

ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்

1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்

2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா

3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும

நாளைய தினத்தைக் குறித்து

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

1. ஆண்டவர் எனது வெளிச்சமும்
மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா

2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா

3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா

4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா

5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித்
தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்

1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்

2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா

3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும

என்னைத் தேடி இயேசு வந்தார்

என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்

1. மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்

2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்

3. சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

4. தெரிந்துகொண்டார் என்னை
தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ

உம்மை நோக்கிப் பார்க்கிறேன்

உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
உம்மை நினைத்து துதிக்கிறேன்
இயேசையா ஸ்தோத்திரம் (4)

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் – நான்
என்னை மறக்கின்றேன

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம
ஆடுவோம் கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே

1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்

2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்

3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்

4. ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய

5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

6. அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே

1. கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன

Friday, 28 August 2015

கரம் பிடித்து வழி நடத்தும்

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா

1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்

2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்

3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம

இயேசு நம் பிணிகளை

இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார்

1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர் மேல் விழுந்தது
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் – நாம்

2. கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்
கத்திரிப்பேன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய்கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்

3. நம் பாவம் அனைத்தும் அகற்றிவிட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார

இயேசு போதுமே

இயேசு போதுமே
எனக்கு போதுமே – 2

1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார்
இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்

2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்
இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்

3. இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்
இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர்

4. இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்
இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும்
வாழ்கின்றார

யார் பிடிக்க முடியும்

யார் பிடிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

4. பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ

6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

தேவனே என் தேவா

தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்

1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்

2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்

3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்

4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது

5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்

சாரோனின் ராஜா இவர்

சாரோனின் ராஜா இவர்
பரிபூரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
துணைவன் என்பேன்
இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன

1. சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்

2. மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புதுகிருபை
காலை தோறும் நமக்கு உண்டு

3. நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார

எங்கள் தேவன் வல்லவரே

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா

1. தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்

2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு

3. அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

அன்பின் தெய்வம் இயேசு

அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2

1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்

2. இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்

3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு

இம்மட்டும் கைவிடா

இம்மட்டும் கைவிடா தேவன்
இணியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

1. ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ

3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

யார் வேண்டும் நாதா நீரல்லவோ

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. என்னைத் தள்ளினால் நான் எங்கே
போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

ஆண்டவர் எனக்காய் யாவையும்

ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா

1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்

2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன

என் தெய்வம் இயேசு

என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா – 4

1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்

2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தை தரிசிப்பேன

பரிசுத்தமே பரன் இயேசு

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்

1. கர்த்தர் மலைமேல் ஏறிக்சென்று
நிற்கக் கூடியவன் யார் ?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே

2. நாமெல்லாம பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது

3. பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன் – 2

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா

மரித்த இயேசு உயிர்த்து விட்டார்
அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த
முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத்
தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி
தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

4. அஞ்சாதே முதலும் முடிவும்
இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்

எங்கு போகறீர் இயேசு தெய்வமே

எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்

2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன்

3. பெருமை கோபத்தால் உம் கன்னம்
அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால்
உம் விலாவை குத்தினேனே

4. கசையால் அடித்தது என் காம
உணர்ச்சியால்
காரித் துப்பியது என் பகைமை உணர்ச்சியால்

5. அசுத்த பேசுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக்
கொடுத்தேனே