Search This Blog

Sunday, 22 May 2016

வாழ்நாளெல்லாம் (காலைதோறும்)களிக்கூர்ந்து

வாழ்நாளெல்லாம் (காலைதோறும்)
களிக்கூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்

1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறைதோறும்
– வாழ்நாளெல்லாம்

2. உலகமும் பூமியும் தோன்றுமுன்னே
என்றென்றும் இருக்கின்ற என்
தெய்வமே- வாழ்நாளெல்லாம்

3. துன்பத்தைக் க்ணட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்-
வாழ்நாளெல்லாம்

4. அற்புத செயல்களை காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச்
செய்யும்- வாழ்நாளெல்லாம்

5. செய்யும் செயல்களைச்
செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும்
வெற்றிதாரும்- வாழ்நாளெல்லாம்

6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த இதயம் தாரும்-
வாழ்நாளெல்லாம்

7. ஆயுள் நாட்கள் எழுபதுதான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பதுதான்-
வாழ்நாளெல்லாம்

8. ஆயுரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்துபோன ஓர் நாள்போல-
வாழ்நாளெல்லாம

No comments:

Post a Comment