Search This Blog

Wednesday 11 September 2019

தோத்திரம் தோத்திரம் இயேசு சுவாமிக்கு தோத்திரமே

தோத்திரம் தோத்திரம் இயேசு சுவாமிக்கு தோத்திரமே 

தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் ஸ்தோத்திரமே 

1. கோடாகோடி தூதர்கள் சபை கூடி நடனமாடி
 பாடி உமைத் துதிக்கப் பாவியானும் உமைத் துதிப்பேன் -  தோத் 

2. கேருபீன் சேராபீன்கள் உடல் செட்டைகளால் மூடி 
நேராய் உமைத் துதிக்க நீசன் யானும் உமைத் துதிப்பேன் -  தோத் 

3. கன்னியர் கீதம் பாடி இயேசு கர்த்தனையே போற்றி 
உன்னித் துதித்திடவே பாவியானும் உமைத் துதிப்பேன்  -  தோத் 

4. பரிசுத்தவான்கள் சங்கம் எங்கள் பார்த்திபன் இயேசுவையே 
தரிசித்துப் போற்றிடவே தாசன் யானும் உமைத் துதிப்பேன் -  தோத்

5. மூப்பர் சுற்றி நின்று எங்கள் முன்னவன் இயேசுவையே 
ஆர்ப்பரித்துத் துதிக்க அடியானும் உமைத் துதிப்பேன்  -  தோத்

6. வானத்தின் ஜோதி எல்லாம் தேவ மைந்தனேயே போற்றி 
ஞாலத்திலே துதிக்கப் பாவியானும் உமைத் துதிப்பேன்  -  தோத் 

7. பூமியின் தாவரங்கள் புஷ்பம் பூத்துத் துளிர் மலர்ந்து 
சாமி உமைத் துதிக்கத்  தாசன் யானும் உமைத் துதிப்பேன்  -  தோத் 

8. தாழ்த்தித் தலை குனிந்து இரத்தச் சாட்சிகள் கூட்டமெல்லாம்
வாழ்த்தி உமைத் துதிக்கப் பாவியானும் உமைத் துதிப்பேன்  -  தோத் 

No comments:

Post a Comment