கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத்
தேற்றி அணைத்துக் காத்துக் கொண்டாரே - தேவசுதன்
1. பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடி வந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? - பூவுலகில்
2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுங்கச் சித்தங் கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே -எந்தனுக்காய்
3. ஆடுகளுக்காக உயிர்தனைக் கொடுத்து
கேடுவராது காக்கும் நம் மேய்ப்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித்துதிப்பேன் - இறைவனை
4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக்குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் - நித்தியமாய்
5. குயவனின் கையில் களிமண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா - ஏழையென்னை
No comments:
Post a Comment