148 ஆம் சங்கீதம்
திரித்துவப் பொருளை திரியேக வுருவை
தினமும் அல்லேலூயா துதியுங்கள் அவரை
1. கருத்தனைத் துதியும் வானுளவைகளே
களித்துன்ன தங்களில் துதியுந் தூதர்களே
கடவுளின் சேனைகளே துதியும்
கதிரவன் மதியே நட்சத்திரங்களே
கனவானங்களே சகல ஜனங்களே - திரித்துவப்
2. மகியுளவைகளே மகா நீர் மச்சங்களே
மழைகளே அக்கினியே மூடுபனிகளே
மலைகளே காற்றே மேடுகளே
மதுர மரங்களே கேதுருக்களே
மதவிலங்குகளே பறவையினங்களே - திரித்துவப்
3. புவியரசர்களே சகல ஜனங்களே
புவன பிரபுக்களே நீதிபதிகளே
புகழ் வாலிபர் கன்னிகைகளே
புதல்வர்களே செல்வப் புதல்விகளே
புங்கவனைத் துதியும் முதியோர்களே - திரித்துவப்
4. ஆண்டவர் நாமம் அதிக உயர்ந்தது
அவர் மகிமை வான்புவியில் சிறந்தது
ஆனந்தமாய்த் தன்னடியார்கள்
அகமகிழ்ந்திஸ்ரவேல் வழிகளை வாழ்த்தினார்
அன்னவர்க்காய் ஒரு கொம்பையுயர்த்தினார் - திரித்துவப்
No comments:
Post a Comment