Search This Blog

Showing posts with label நம்பிவந்தேன் மேசியா. Show all posts
Showing posts with label நம்பிவந்தேன் மேசியா. Show all posts

Sunday, 10 February 2008

நம்பிவந்தேன் மேசியா

பல்லவி
நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே - திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே

சரணங்கள்
1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே - வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே --- நான்

2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே --- நான்

3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் - அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே --- நான்

4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே - கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே --- நான்

5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே --- நான்