Search This Blog

Showing posts with label Yengumullor yaarum sernthu sthotharippome. Show all posts
Showing posts with label Yengumullor yaarum sernthu sthotharippome. Show all posts

Wednesday, 11 September 2019

எங்கும் உள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே

எங்கும் உள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே 
இஸ்ரவேலின் கர்த்தருக்கு துதி செலுத்துமே 
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே 
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே 

1. தேவமைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே 
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே 
கடந்தகால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே 
ஜீவன் விட்ட சுத்தருக்காய்  ஸ்தோத்தரிப்போமே 
கோதுமை மணி தணித்தால் இலாபம் எது உண்டு பாரீர் 
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே

2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே 
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயங்கொள்ள மாட்டார் 
கீழ்ப்படியக் கற்றுக் கொண்டார் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்கு பரிசு நூறத்தனையாகக் கிட்டும் 
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே 

3. அத்திமரம் துளிர்விடாமல் போன போதிலும்
திராட்சச்செடியின் கனி காணாமல் கருகிப்போயினும் 
ஒலிவ மரத்தின் பலன்கள் கூடி அற்றுப்போயினும் 
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்த போதிலும் 
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று 
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே