Search This Blog

Saturday, 5 December 2015

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என்ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை எனக்கு எதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள
முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை

No comments:

Post a Comment