Search This Blog

Thursday, 14 February 2008

கண்களை ஏறெடுப்பேன்

எழுதியவர் :  ஐயாத்துரை
பியாகு
தாளம் : சாபுதாளம்

பல்லவி
கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் --- கண்களை

சரணங்கள்
1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் --- கண்களை

2.பக்க நிழல் அவரே -- எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே --- கண்களை

3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் --- கண்களை



பாடல் பிறந்த கதை:

யூத மக்கள் தங்களுடைய முக்கிய பண்டிகை நாட்களில், எருசலேம் தேவாலயத்தில் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தச் செல்வது வழக்கம். பிரயாண வசதிகள் இல்லாத அந்நாட்களில் தங்கள் சொந்த ஊரிலிருந்து எருசலேம் பட்டணத்திற்கு, கால்நடையாகவே பயணம் செய்வார்கள். இப்பயணம் முடிவுற பல நாட்கள் ஆகும். எனவே, பயண நேரத்தை இனிதாக்க, பாடல்களைப் பாடிக்கொண்டே செல்வார்கள். இப்பாடல்கள் "பயண வழிபாட்டு சங்கீதங்கள்" என்று அழைக்கப்படும்.

வேத புத்தகத்திலுள்ள தாவீதின் சங்கீத புத்தகத்தில் சங்கீதம் 120 முதல் 134 வரையுள்ள சங்கீதங்கள் பயண வழிபாட்டு சங்கீதங்களாகும். இவற்றில் ஒன்றான சங்கீதம் 121ஐ அடிப்படையாகக் கொண்டு இப்பாடல் இயற்ற்றப்பட்டது. இப்பாடலை இயற்றியவர் கயத்தாறு ஐயாத்துரை பாகதராவார்.

ஐயாத்துரை, ஸ்ரீவைகுண்டத்தில் தங்களுக்கு ஒரு கோட்டை கட்டி, தங்கள் பெண்கள் வெளியே வரக்கூடாதென்கிற கண்டிப்பான வழக்கத்தை, கடந்த நூற்றாண்டு வரை கையாண்ட மக்களினத்தைச் சேர்ந்தவர். இவர் முதலில் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவராகி பின்பு ரோமன் கத்தோலிக்கச் சபையில் சேர்ந்து கொண்டார். இவர் 1948ம் ஆண்டில் தமது 64ம் வயதில், இவ்வுலக வாழ்வின் பயணத்தை முடித்தார்.

No comments:

Post a Comment