Search This Blog

Monday, 14 January 2008

ஆவியை அருளுமே சுவாமீ

ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!

1. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை. - ஆவியை

2. தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும். - ஆவியை

3. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? - ஆவியை

No comments:

Post a Comment