Search This Blog

Tuesday, 15 January 2008

ஆனந்தமே ஜெயா ஜெயா

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.

ஞானரட்சகர், நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார். - புகழ்

1. சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்,
எங்கள் ரட்சகரேசு நமை - வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால். - புகழ்

2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால். - புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத்
தரைதனில் குறை தணித்தாற்றியதால். - புகழ்

No comments:

Post a Comment