Search This Blog

Thursday, 17 January 2008

ஆமென் அல்லேலூயா

ஆமென், அல்லேலூயா! ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா;
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா.

தொல்லை அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே! - ஆமென்

1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
சங்கரித்து, - முறித்து;
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து,
பாடுபட்டுத்தரித்து, முடித்தார். - ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,
ஜீவனே விடிந்து, - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. - ஆமென்

3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார். - ஆமென்

No comments:

Post a Comment