Search This Blog

Saturday, 15 March 2014

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்


1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5.என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்e

பாடல் பிறந்த கதை:
புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை ௨ருவான 16-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை திருச்சபையின் பாடல்௧ள் அனைத்தும் "ஸ்டெர்ன்ஹொல்ட் ஹாப்கின்ஸ் சால்ட்டர் " என்ற சங்கீதங்களின் அமைப்பில் பாடப்பட்டன. இவை கடினமான அமைப்பாக இருந்ததால் அவற்றைப் பாடுவது கடினமாக இருந்தது. எனவே, சங்கீதங்களை நவீனம முறையில்மாற்றியமைத்து எளிதில் பாடும்படி கவிஞர்களான நாகூம்டேட்டும், நிக்கோலஸ் பிராடியும் முயற்சி எடுத்தனர்.

கடும் எதிர்ப்புகள் மத்தியில் வில்யம் அரசனின் ஆதரவுடன் இப்புதிய அமைப்பு சங்கீதங்கள் இங்கிலாந்து திருச்சபையில் உபயோகப்படுத்தப்பட்டன.  இதைத்தொடர்ந்து 1700-ம் ஆண்டு இப்பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இப்பாடலுக்கு புகழ் பெற்ற ஜார்ஜ்
F  ஹேண்டல் இராகம் அமைத்தார்.

No comments:

Post a Comment