Search This Blog

Saturday, 20 June 2015

வந்தனம் வந்தனமே

எழுதியவர் : வே.மாசிலாமணி
தாளம் : சாபுதாளம்
சங்கராபரணம்


பல்லவி
வந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே !-இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத்தந்தனம்.

சரணங்கள்

1.சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுனன்றிகடையாலமே,-நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

2.சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காதததுவே-எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!

3.சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே , சத்ய
சருவேசுரனே ,கிருபாகரனே ,உன் சருவத்துகுந் துதியே .

4.உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .

5.மாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை -உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .

No comments:

Post a Comment