Search This Blog

Sunday, 21 June 2015

அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா

எழுதியவர்  :  வேதநாயகம் சாஸ்திரியார்     
ரீதிகௌள              
சாபுதாளம்

பல்லவி

                அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா

சரணங்கள்

1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
    அமையும் தத்துவம் தொண்ணூற்றாறும் ஆறுங்கடந்த - அமலா

2. அந்தம் அடி நடு இல்லாத நற்பரன் ஆதி,
    சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி - அமலா

3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
    வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத - அமலா

4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
    தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப -அமலா

5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,
    கர்த்த தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா - அமலா

6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
    சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான - அமலா

7. கருணாகரா, உப காரா, நிராகரா,
    பரமேசுரா, கிருபாகரா, சர்வேசுரா - அமலா

No comments:

Post a Comment